Pages

Monday 16 April 2012

ஆறு கோடி தமிழர்கள் ரசிக்கும் படம்‌

விஷ்ஷிங் வெல் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தேவ்குமார் தயாரித்துள்ள புதியபடம் ஒத்த வீடு. இப்படத்தின் நாயகன், நாயகியாக திலீப்குமார், ஜானவி நடிக்கின்றனர். இவர்களுடன் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், திரவிய பாண்டியன், நெல்லை சிவா, இமான், சண்முகம், யோகி தேவராஜ், மதுரை சரோஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலு மலர்வண்ணன் இயக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீரஞ்சன் ஒளிப்பதிவு செய்ய, இத்ரீஸ் - சங்கர் இருவரும் படத்தொகுப்பு செய்துள்ளனர். வீ.தஷி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பெரும்பகுதி சூட்டிங் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வடசங்கந்தி, காஞ்சிபுரம், வில்லிவலம் உள்ளிட்ட பல கிராமங்களில் நடந்து முடிந்துள்ளது. மார்ச் 30 முதல் திரைக்கு வர இருக்கிறது. ஒத்த வீடு படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரொம்ப பேசப்படுமாம். படம்குறித்து டைரக்டர் பாலு மலர்வண்ணன் கூறுகையில், இது ஆறு கோடி தமிழர்கள் பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும் என்று ஒத்த வரியில், ஒத்த வீடு படம் குறித்து கூறியுள்ளார்.

வி‌ரை‌வி‌ல் தி‌ரை‌யி‌ல் ஒத்‌தவீ‌டு தி‌ரை‌ப்‌படம்.

வி‌ரை‌வி‌ல் வெ‌ள்‌ளி‌த்‌தி‌ரை‌யி‌ல் ஒத்‌தவீ‌டு தி‌ரை‌ப்‌படம்.

வி‌ஷ்‌ஷி‌ங் வே‌ல் பு‌ரொ‌டக்‌ஷன் சா‌ர்‌பி‌ல் தே‌வ்‌குமா‌ர் தயா‌ரி‌த்‌துள்‌ள படம் ஒத்‌தவீ‌டு. இப்‌படத்‌தி‌ன் கதை, தி‌ரை‌க்‌கதை, எழுதி இயக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர் பா‌லுமலர்‌வண்‌ணன்.

 இப்‌படத்‌தி‌ன் நா‌யகனா‌க ஆழ்‌கடல் வீ‌ரல் தி‌லீ‌ப் குமா‌ர் நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர். நா‌யகி‌யா‌க பு‌துமுகம் ஜா‌னவி அறி‌முகமா‌கி‌றா‌ர். இவர்‌களுடன் வடி‌வு‌க்‌கரசி‌இ எம்.எஸ்.பா‌ஸ்‌கர், தி‌ரவி‌ய பா‌ண்‌டி‌யன், நெ‌ல்‌லை சி‌வா,இமா‌ன், சண்‌முகம், பந்‌தனா, ரா‌தா, வா‌மன்‌மா‌லி‌னி, யோ‌கி தே‌வரா‌ஜ், மதுரை சரோ‌ஜா மற்‌றும் பலர் நடி‌த்‌துள்‌ளனர்.

இப்‌படத்‌தி‌ற்‌கு வீ.தஷி இசை‌யமை‌த்‌துள்‌ளா‌ர். ஸ்ரீ ரஞ்‌சன் ஒளி‌ப்‌பதி‌வு செ‌ய்‌துள்‌ளா‌ர். இத்‌ரீ‌ஸ்-சங்‌கர் இருவரும் இணை‌ந்‌து எடி‌ட்‌டி‌ங் செ‌ய்‌துள்‌ளனர்.

இப்‌படம் பற்‌றி கதா‌நா‌யகன் தி‌லீ‌ப் குமா‌ர் கூறுகை‌யி‌ல்: நல்‌ல கதை‌யம்‌சம் உள்‌ள படங்‌களி‌ல் நடி‌க்‌க வே‌ண்‌டும் என்‌று நா‌ன் நி‌றை‌ய கதை‌களை கே‌ட்‌டு வந்‌தே‌ன். அதே போ‌ல சி‌னி‌மா‌வு‌க்‌கு தே‌வை‌யா‌ன நடி‌ப்‌பு, நடனம், பை‌ட் என தி‌றமை‌களை மூ‌ன்‌று ஆண்‌டுகள் கத்‌துக்‌கி‌ட்‌டே‌ன். இந்‌த சமயத்‌தி‌ல் தா‌ன் இயக்‌குநர் பா‌லுமலர்‌வண்‌ணன் வந்‌து இந்‌த ஒத்‌தவீ‌டு படத்‌தோ‌ட கதை‌யை‌ச் சொ‌ன்‌னா‌ர்.

ஒரு குடும்‌பத்‌தி‌ல் ஏற்‌படும் சி‌று பி‌ரச்‌சனை எத்‌தனை பெ‌ரி‌ய நி‌கழ்‌வு‌களை ஏற்‌படுத்தி அவர்‌களி‌ன் வா‌ழ்‌க்‌கை‌யை எப்‌படி பந்‌தா‌டுகி‌றது. அவர்‌கள் கனவு‌களை எல்‌லா‌ம் எப்‌படி கலை‌த்‌து போ‌டுகி‌றது என்‌பது போ‌ன்‌ற ஒரு அற்‌பு‌தமா‌ன செ‌ண்‌டி‌மெ‌ண்‌ட் கதை இது.

நல்‌ல எமோ‌ஷன் இருக்‌கு. கலகலன்‌னு சி‌ரி‌க்‌கி‌ற கா‌மெ‌டி இருக்‌கு. உடம்‌பை முறுக்‌கி நிமுத்‌துகிற பை‌ட் இருக்‌கு. எல்‌லா‌ம் கதை‌க்‌கா‌க தா‌ன் அமை‌ந்‌தது. அதனா‌ல் தா‌ன் இந்‌தக் கதை‌யி‌ல் நடி‌க்‌க ஒத்‌துக்‌கி‌ட்‌டே‌ன். இந்தப் படத்‌தை தே‌வ்‌குமா‌ர் தயா‌ரி‌த்‌துள்‌ளா‌ர்.

படத்‌தி‌ல் என் அம்‌மா‌வா‌க வடி‌வு‌க்‌கரசி‌யம்‌மா நடி‌ச்‌சி‌ருக்‌கா‌ங்க, பெ‌ரி‌யப்‌பா‌வா‌க எம்.எஸ்.பா‌ஸ்‌கர் நடி‌த்‌துள்‌ளா‌ர். நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள் என்‌று சொ‌ல்‌வதை விட அந்தக் கதாபா‌த்‌தி‌ரமாக வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்கள.

கே‌ரள அரசி‌ன் சி‌றந்‌த இசை‌யமை‌ப்‌பா‌ளரி‌ன் வி‌ருது பெ‌ற்‌ற வீ.தஷியி‌ன் இசை‌யி‌ல் ஆறு பா‌டல்‌கள் படத்‌தி‌ல் இடம் பெ‌றுகி‌ன்றது. எல்‌லா‌மே சூ‌ழ்‌நி‌லை‌க்‌கு தகுந்‌த மா‌தி‌ரி எழுதப்‌பட்‌ட பா‌டல்‌கள்.

 தா‌னு கா‌ர்‌த்‌தி‌க் அவர்‌கள் எழுதிய வீ‌ரனா‌ர் வா‌றா‌ரு பா‌டல் பட்‌டி தொ‌ட்‌டி எ‌ங்‌கும் பே‌சப்‌படும். அற்‌தளவு பா‌டலி‌ல் டெ‌ம்‌போ இயற்‌கை‌யாகவே அமை‌ந்‌துள்‌ளது. எனக்‌கு தெ‌ரி‌ந்‌து, வீ‌ரன் பற்‌றி‌ய பா‌டல் இதுவரை வெ‌ளி‌வந்‌ததி‌ல்‌லை என்‌று நி‌னை‌க்‌கி‌றே‌ன்.

வி‌ல்‌லி‌வலம் கி‌ரா‌மத்‌தி‌ல் கி‌ரகம் எடுத்‌து தெ‌ரு வழி‌யாக வலம் வந்‌து, கோ‌விலி‌ல் செ‌ன்‌று இறக்‌கி வை‌க்‌கும் கா‌ட்‌சி எடுத்‌த போ‌து, அந்‌த கி‌ரா‌மத்‌து மக்‌கள் அனை‌வருமே தங்‌கள் வீ‌டுகளிலே‌யே மா‌வி‌ளக்‌கு போ‌ட்‌டு ஊர்‌வலத்‌தி‌ல் எடுத்‌து வந்‌து நடி‌த்‌ததோ‌டு மட்‌டுமல்‌லா‌மல், என்‌னோ‌ட வீ‌ரனா‌ர் ஆட்‌டத்‌தை பா‌ர்‌த்‌து வி‌யந்‌து போ‌னா‌ர்‌கள். படத்‌துல அந்‌தப் பா‌ட்‌டு ஹை‌லை‌ட்‌டா அமை‌ஞ்‌சி‌ருக்‌கு.

அதே போ‌ல வா‌ட்‌டா‌குடி ரா‌ஜரா‌ஜன் எழுதி‌ய ஓலவீ‌டு… ஓட்‌டுவீ‌டு பா‌டலி‌ல் நூ‌று துணை நடி‌கர்‌கள், பதி‌னை‌ந்‌து நடன கலை‌ஞர்‌கள் என பி‌ரமா‌ண்‌டமா‌க செ‌லவு செ‌ய்‌து படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றோ‌ம்.

பட்‌டுக்கோ‌ட்டை சண்‌முக சுந்‌தரம் எழுதிய “உலகமோ உள்‌ளங்‌கை‌யி‌லே…” பா‌டலும் அருமை‌யா‌க வந்‌தி‌ருக்‌கி‌றது. அதை மணி‌மங்‌கலத்‌தி‌ல் வை‌த்‌து படமா‌க்‌கி‌னோ‌ம். அதே போ‌ல கண்‌னோ‌டு வந்‌தா‌ய்… நெ‌ஞ்‌சி‌ல் நி‌ன்‌றா‌ய்… என்ற ஒரு டூ‌யட் பா‌டலும் இருக்‌கி‌றது.

 இப்‌போ‌து படப்‌பி‌டி‌ப்‌பு வே‌லை‌கள் எல்‌லா‌ம் முடி‌ந்‌து வி‌ட்‌டது. மி‌க வி‌ரை‌வி‌ல் படம் தி‌ரை‌க்‌கு வரவி‌ருக்‌கி‌றது.

த்த வீடு படத்தில் நீச்சல் வீரர் திலீப்குமார்

பிரபல நீச்சல் வீரர் திலீப்குமார். இவர் ஆழ்கடலில் 15 கி.மீட்டர், 20 கி.மீட்டர் என நெடுந்தொலைவில் நீச்சல் அடித்து பாராட்டு பெற்றவர். திலீப்குமார் 'ஒத்த வீடு' என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். நாயகியாக ஜானவி மற்றும் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், திரவியபாண்டியன், நெல்லை சிவா, இமான், சண்முகம், வந்தனா, யோகி தேவராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பாலு மலர்வண்ணன் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக நடிப்பது பற்றி திலீப்குமார் கூறியதாவது:-

சினிமாவுக்கு தேவையான நடிப்பு, நடனம், ஸ்டண்ட் போன்றவற்றை மூன்று ஆண்டுகள் கற்றுக்கொண்டு 'ஒத்த வீடு' படம் மூலம் நாயகனாகியுள்ளேன். இயக்குனர் பாலுமலர் வண்ணன் கதை சொன்னதும் பிடித்தது. சிறு பிரச்சினை வாழ்க்கையை எப்படியெல்லாம் பந்தாடு கிறது. கனவுகளை சிதைக்கிறது என்று கருவில் அற்புதமான சென்டிமென்ட் கதையாக வந்துள்ளது.

காமெடி, ஸ்டன்ட், காதல் எல்லாம் இருக்கும். கேரள அரசிடம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற வீ.தஷி இசையில் ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீரனார் பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும். வில்லிவலம் கிராமத்தில் விநாயகர் கோவி லில் கரகம் எடுத்து படமாக்கினோம். பெண்கள் மா விளக்கு எடுத்து ஊர்வலம் வந்தனர். எனது வீரனார் ஆட்டத்தை பலரும் பாராட்டினர்.

ஒத்தவீடு ஓட்டு வீடு என்ற பாடலை நூறு துணை நடிகர்கள் வைத்து படமாக்கினோம். உலகமோ உள்ளங்கை யிலே கண்ணோடு வந்தாய் போன்ற பாடல்களையும் பிரமாதமாக படமாக்கியுள்ளோம். படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை விஷ்சிங் வெல் புரொடக்ஷன்ஸ் சார்பில் தேவ்குமார் தயாரிக்கிறார்.

இவ்வாறு திலீப்குமார் கூறினார்.

ஒத்‌தவீ‌டு படத்‌தி‌ற்‌கு யு‌ சா‌ன்‌றி‌தழ்‌

பு‌தி‌யவர்‌ பா‌லு மலர்‌வண்‌ணன்‌ இயக்‌கி‌ உள்‌ள படம்‌ ஒத்‌தவீ‌டு. இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பு‌துமுகங்‌கள்‌ தி‌லி‌ப்‌குமா‌ர்‌, ஜா‌னவி‌ இருவரும்‌ நா‌யகன்‌ நா‌யகி‌யா‌க நடி‌க்‌க, முக்‌கி‌ய கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ வடி‌வு‌க்‌கரசி‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌, நெ‌ல்‌லை‌ சி‌வா‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌.

வி‌ஷ்‌ஷி‌ங்‌ வெ‌ல்‌ பு‌ரொ‌டக்‌ஷன்‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ தே‌வ்‌குமா‌ர்‌ தயா‌ரி‌த்‌துள்‌ள இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு வீ‌.தஷி‌ இசை‌யமை‌த்‌துள்‌ளா‌ர்‌. இப்‌படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ முடி‌வடை‌ந்‌து, செ‌ன்‌ற வா‌ரம்‌ செ‌ன்‌சா‌ர்‌ சா‌ன்‌றி‌தழ்‌ பெ‌ற வி‌ண்‌ணப்‌பம்‌ செ‌ய்‌தி‌ருந்‌தனர்‌.

இப்‌படத்‌தை‌ பா‌ர்‌த்‌த செ‌ன்‌சா‌ர்‌ குழு, படத்‌தை‌ வெ‌குவா‌க பா‌ரா‌ட்‌டி‌யதோ‌டு, அனை‌வரும்‌ பா‌ர்‌க்‌க கூடி‌ய யு‌ சா‌ன்‌றி‌தழ்‌ வழங்‌கி‌ உள்‌ளது.

இது பற்‌றி‌ இயக்‌குநர்‌ பா‌லு மலர்‌வண்‌ணன்‌ கூறுகை‌யி‌ல்‌, “நா‌ன்‌ படம்‌ எடுக்‌கும்‌ போ‌தே‌ இது யு‌ சா‌ன்‌றி‌தழ்‌ கி‌டை‌க்‌க கூடி‌ய படமா‌க இருக்‌கும்‌ என்‌பதை நி‌னை‌த்‌துதா‌ன்‌ எடுத்‌தே‌ன்‌. நா‌னே‌ ஒரு செ‌ன்‌சா‌ர்‌ அதி‌கா‌ரி‌ போ‌ல இருந்‌து படம்‌ இயக்‌கினே‌ன்‌. ‌நல்‌ல கதை‌யு‌ம்‌ சுவரா‌ஸ்‌யமா‌ன கா‌ட்‌சி‌களும்‌ படத்‌தி‌ல்‌ இருந்‌தா‌ல்‌ மக்‌கள்‌ ரசி‌ப்‌பா‌ர்‌கள்‌. கி‌ளமரை‌ ரசி‌க்‌க மட்‌டும்‌ படம்‌ பா‌ர்‌க்‌க வருவதி‌ல்‌லை‌. அப்‌படி‌ ஒவ்‌வொ‌ருவரும்‌ நி‌னை‌த்‌து படம்‌ எடுத்‌தா‌ல்‌ செ‌ன்‌சா‌ர்‌ அதி‌கா‌ரி‌களுக்‌கு வே‌லை‌யே‌ இருக்‌கா‌து..” இவ்‌வா‌று கூறி‌னா‌ர்‌

இந்‌தப்‌ படம்‌ வி‌ரை‌வி‌ல்‌ தி‌ரை‌க்‌கு வருகி‌றது.

‘ஒத்‌தவீ‌டு’பா‌டல்‌ வெ‌ளி‌யீ‌ட்‌டு வி‌ழா‌

விஷ்ஷிங் வெல் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தேவ்‌ குமார் தயாரித்து வரும் படம் ‘ஒத்த வீடு’.

இந்தப் படத்தில் புதுமுகங்கள் திலீப்குமார், ஜானவி ஜோடியாக நடிக்க, இவர்களுடன் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், திரவிய பாண்டியன், நெல்லை சிவா, இமா‌ன்‌, பந்தனா, ராதா, வாமன் மாலினி, மதுரை‌ சரோ‌ஜா‌, சண்‌முகம்‌, யோ‌கி‌ தே‌வரா‌ஜ்‌ உட்பட பலர் நடித்துள்‌ளனர்‌.

பாலு மலர்வண்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு ஸ்ரீரஞ்சன் ஒளிப்பதிவு செய்துள்‌ளா‌ர்‌. கே‌.இதி‌ரி‌‌ஸ்‌, எம்‌. சங்‌கர் இருவரும்‌ இணை‌ந்‌து எடி‌ட்‌டி‌ங்‌ செ‌ய்‌துள்‌ளனர்‌.

கே‌ரள அரசி‌ன்‌ சி‌றந்‌த இசை‌ அமை‌ப்‌பா‌ளருக்‌கா‌ன வி‌ருது பெ‌ற்‌ற வீ.தஷி இசையமைக்‌க, பா‌டல்‌களை‌ தா‌ணு கா‌ர்‌த்‌தி‌க்‌, பட்‌டுக்‌கோ‌ட்‌டை‌ சண்‌முகசுந்‌தரம், வா‌ட்‌டா‌க்‌குடி‌ ரா‌ஜரா‌ஜன்‌, சி‌ங்‌கப்‌பூ‌ர்‌ சொ‌.சி‌வக்‌குமா‌ர்‌, இனி‌யதா‌சன்‌, வி‌ஜய்‌கி‌ருஷ்‌ணா‌, தமி‌ழமுதன்‌ ஆகி‌யோ‌ர்‌ பா‌டல்‌களை‌ எழுதி‌ உள்‌ளனர்‌.

படத்‌தி‌ல்‌ இடம்‌ பெ‌றும்‌ பா‌டல்‌களுக்‌கு ஈஸ்‌வர்‌பா‌பு‌, ரமே‌ஷ்‌ரெ‌ட்‌டி‌ இருவரும்‌ நடனம்‌ அமை‌த்‌துள்‌ளனர்‌. கலை‌ இயக்‌குநரா‌க சி‌. சண்‌முகம்‌ பணி‌யா‌ற்‌றி‌ உள்‌ளா‌ர்‌.

கா‌ஞ்‌சி‌பு‌ரம்‌ அருகே‌ உள்‌ள வி‌ல்‌லி‌வலம்‌ கி‌ரா‌மத்‌தி‌லும்‌, தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ அருகே‌ உள்‌ள வடசங்‌கந்‌தி‌ கி‌ரா‌மத்‌தி‌லும்‌ வசனக்‌ கா‌ட்‌சி‌கள்‌ படமா‌கி‌ உள்‌ளது. தற்‌போ‌து பி‌ன்‌னணி‌ இசை‌யமை‌ப்‌பு‌ வே‌லை‌கள்‌ நடை‌பெ‌ற்‌று வருகி‌றது. வி‌ரை‌வி‌ல்‌ வெ‌ளி‌யா‌க உள்‌ள இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ பா‌டல்‌கள்‌ இன்‌று வெ‌ளி‌யா‌கி‌ உள்‌ளது.

தி‌ரை‌யரங்‌க உரி‌மை‌யா‌ளர்‌ சங்‌க தலை‌வர்‌ அபி‌ரா‌மி‌ ரா‌மநா‌தன்‌ தலை‌மை‌ தா‌ங்‌க, தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ கே‌.ஆர்‌.ஜி‌., முன்‌னி‌லை‌ வகி‌த்‌தா‌ர்‌. முதல்‌ பா‌டல்‌ சி‌டி‌யை‌ இயக்‌குனர்‌ அமீ‌ர்‌ வெ‌ளி‌யி‌ட, நடி‌கர்‌ பி‌ரஷா‌‌ந்‌த்‌ பெ‌ற்‌றுக்‌ கொ‌ண்‌டா‌ர்‌. தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌கள்‌ கலை‌ப்‌பு‌லி‌ எஸ்‌.தா‌ணு, இயக்‌குநர்‌கள்‌ வி‌.சே‌கர்‌, பே‌ரரசு, சுப்‌பி‌ரமணி‌யம்‌ சி‌வா‌, வி‌.இசட்‌ துரை‌, பா‌ண்‌டி‌ரா‌ஜ்‌,   தொ‌ழி‌லதி‌பர்‌கள்‌ ஏ.எஸ்‌. சண்‌முகம்‌, துரை‌, பி‌.ஆர்‌.ஓ. டை‌மண்‌ட்‌ பா‌பு‌, வி‌ஜயமுரளி‌ ஆகி‌யோ‌ர்‌ கலந்‌து கொ‌ண்‌டு வா‌ழ்‌த்‌தி‌ பே‌சி‌னா‌ர்‌கள்‌.

முன்‌னதா‌க இயக்‌குநர்‌ பா‌லு மலர்‌வண்‌ணன்‌ வரவே‌ற்‌றா‌ர்‌. முடி‌வி‌ல்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ தே‌வ்‌ குமா‌ர்‌ நன்‌றி‌ கூறி‌னா‌ர்‌. நி‌கழ்‌ச்‌சி‌களை‌ கவி‌தா‌ தொ‌குத்‌து வழங்‌கி‌னா‌ர்‌

பா‌லு மலர்‌வண்‌ணன்‌ இயக்‌கும்‌ ‘ஒத்தவீடு’

‘விஷ்ஷிங் வெல்’ புரொடக்ஷன்ஸ் சார்பில் தேவ்குமார் தயாரிக்கும் புதிய படம் ‘ஒத்தவீடு’.

இந்தப் படத்தில் புதுமுகம் திலீப்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  அவருக்கு ஜோடியாக ஜானவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சுப்புராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாலு மலர்வண்ணன். ரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு செய்ய, வீ. தஷி இசையமைக்கிறார்.

இப்படத்தில் இடம் பெறும் ஆறு பாடல்களில், ஒரு பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் மகன், பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம் எழுதுகிறார். மற்றப் பாடல்களை கவிஞர் ராஜராஜன், தானு கார்த்திக், சிங்கப்பூர் சொ.சிவக்குமார், இனியதாசன், விஜய்கிருஷ்ணா ஆகியோர் எழுதுகின்றனர்.

பேய், பிசாசு பற்றி நாம் சிந்திப்பதால் நமக்கு ஏற்படுவது அச்சமும், மனநோயும்தான் என்ற கருவை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம் அருகே உள்ள வில்லிவலம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர், சங்கேந்தி போன்ற கிராமங்களில் நடைபெறுகிறது.

இப்படத்திற்கு கலை: சி.சண்முகம், படத்தொகுப்பு: எம்.சங்கர்-இத்ரிஸ், நடனம்: ரமேஷ்ரெட்டி, சண்டைப் பயிற்சி: ஆக்ஷன்  பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை: அண்ணாமலை.

இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து ஒரே கட்டமாக நடைபெறுகிறது.